« Back to word list

அபியு (Abihu)

(அவர் என் பிதா)

ஆரோனின் மகன். இவனும் சீனாய் மலைமேல் ஏறி, இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தான். (யாத். 24:1,9). ஆசாரிய ஊழியத்துக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டான் (யாத். 28:1). பின்பு இவனும், நாதாபும் அந்நிய அக்கினியை கர்த்தர் சந்நிதியில் கொண்டு வந்தபோது, பரிசுத்த அக்கினியால் கொல்லப்பட்டார்கள் (லேவி. 10:1,2).

பலிபீடத்தின் மேல் இருந்து எடுக்காத அக்கினியை அந்நிய அக்கினி என்று சொல்லலாம் (லேவி. 6:12). மதுபானத்தின் எழுச்சியினால் இதைச் செய்தான் என்றும் நினைக்க இடமுண்டு (லேவி. 10:9).

« Prev 34 / 564 Next »