அபிஷாக் (Abishag)
(பிழைக்கு நடத்தும் பிதா)
சூனேம் ஊராளாகிய ஓர் அழகான சிறு பெண். தாவீது வயது சென்ற காலத்தில் இவள் அவனுக்குப் பணிவிடை செய்தாள் (1 இரா. 1:1-4). பின்பு அதோனியா இவளை விவாகஞ் செய்ய விரும்பினபோது சாலொமோன் அவனைக் கொல்லுவித்தான் (1 இரா. 2:17, 22-25).