அபெத்தோன் (Abaddon)
(அழிம்பன்)
இந்த வார்த்தை வேதாகமத்தில் வெளி. 9:11ல் மாத்திரம் காணப்படுகிறது. மற்ற இடங்களில் மரித்தவர்கள் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. யோபு 26:6; 31:13ல் பாதாளம் என்றும், யோபு 28:22ல் மரணம் என்றும், சங். 88:12ல் பிரேதக்குழி என்றும் குறித்துள்ளது.
இவன் "பாதாளத்தின்தூதன்" எனப்படுகிறான். எபிரெயு பாஷையில் "அபெத்தோன்" என்றும், கிரேக்க பாஷையில் "அப்பொல்லியோன்" என்றும் சொல்லப்படுகிறான் (வெளி. 9:11).
கர்த்தருடைய நாள் வரும்போது பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும் என்றும், அவர்களால் மனிதருக்கு அதிக சேதம் உண்டாகுமென்றும் குறித்திருக்கிறது. (யோவேல் 2:1-11).
இதிலிருந்து அக்காலத்தில் மகாசங்காரம் உண்டாகும் என்றும், ஒரு துர்ஜனப்பிரவாகம் எழும்புமென்றும், அதற்கு தலைவனாக ஒருவன் எழும்புவான் என்றும் தெரிகிறது.