« Back to word list

அப்னேர் (Abner)

(ஒளியின் பிதா)

அப்னேர் சவுலுக்குச் சகோதர முறையானவன். இவர்களிருவரும் நேர், கீஸ் என்னும் இரண்டு சகோதரரின் குமாரர் அப்னேர் சவுலுடைய சேனாபதியாயுமிருந்தான் (1 சாமு.14:50; 1 நாளா. 9:39).

கோலியாத்தைத் தாவீது கொன்றதைப் பார்த்திருந்த அப்னேர், தாவீதை சவுலுக்கு முன்கொண்டு போய்விட்டான் (1 சாமு. 17:57).

பின்பு சவுல் தாவீதைத் தொடர்ந்துபோன சமயத்தில், அப்னேர் இராஜாவாகிய சவுலை கவனமாய்ப் பாதுகாக்கவில்லை என்று தாவீது அவனைக் கண்டித்தான் (1 சாமு. 26:5-15).

சவுல் மரித்தபோது அப்னேர் இஸ்போசேத்தை மகனாயீமுக்குக் கொண்டுபோய் இராஜாவாக்கினான் (2 சாமு. 2:8-11).

பிற்பாடு தாவீதின் சேவகருக்கும், இஸ்போசேத்தின் சேவகருக்கு மிடையில் நடந்த யுத்தத்தில் அப்னேர் தோல்வியடைந்து ஓடிப் போகையில், ஆசகேல் அவனது எச்சரிப்புக்கு இணங்காமல் அவனைப் பின்தொடர்ந்து போனதினால், அப்னேர் அவனை ஈட்டியால் குத்திக் கொன்றான் (2 சாமு. 2:18-23).

இதன்பின் அப்னேர் தாவீதோடு சமாதானமானதினிமித்தமும்,ஆசகேலின் இரத்தத்தினிமித்தமும், யோவாப் அப்னேரைக் கொன்றான் (2 சாமு. 3:27).

தாவீது அப்னேருக்காக துக்கங்கொண்டாடி எபிரோனில் அவனை அடக்கம் பண்ணின வேளையில், சத்தமிட்டு அழுதான் (2 சாமு. 3:23).

ஆனாலும் அப்னேரின் மரணம் தாவீது இஸ்ரவேலருக்கெல்லாம் இராஜாவாக வர வழிவகுத்தது.

அப்னேர் தேவாலய பரிபாலிப்புக்காகப் பொக்கிஷங்களை நேர்ந்து வைத்திருந்தான் (1 நாளா. 26:28).

« Prev 39 / 564 Next »