« Back to word list

அப்பொல்லோ (Apollos)

(அழிக்கிறவன்)

அலெக்சந்திரியா பட்டணத்திலிருந்த ஒரு வாய்ச்சாலமான, பாண்டித்தியமுள்ள ஒரு யூதன். இவன் வேதாகமங்களில் வல்லவ னுமாயிருந்தான். தொடக்கத்தில் யோவான் ஸ்நானனின் சீஷனாக இருந்ததாகத் தெரிகிறது.

இவன் எபேசு பட்டணம் போய், ஆவியில் அனலுள்ளவனாய், கர்த்தருக்கடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதித்தான். ஆனால், யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்தான். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் அவனைச் சேர்த்துக்கொண்டு, சுவிசேஷத்தின் கொள்கைகளை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள் (அப். 18:22-26).

பின்பு அவன் அகாயா நாட்டிற்குப்போய், கொரிந்து பட்டணத்தில் யூதர்களுடன் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தினான். (அப். 18:27,28). அநேகர் அவனை ஏற்றுக் கொண்டார்கள். இதினிமித்தம் கொரிந்து சபையில் மார்க்க தலைவரைப் பற்றிய பட்சபாதம் உண்டாகி, பிரிவினைகள் வந்ததைப் பற்றிப் பவுல் தன்னுடைய நிருபத்தில் குறிக்கிறான் (1 கொரி. 1:12;3:6).

ஆகிலும் பிற்பாடு பவுல், அப்பொல்லோ ஒரு சகோதரனென்று சொல்லி, அவன் திரும்பவும் கொரிந்து சபையைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினதிலிருந்து, பவுலுக்கு அவனுடைய போதனையைப் பற்றி முழு நம்பிக்கை இருந்ததாகத் தெரியக் கிடக்கிறது (1கொரி. 16:12).

பவுல் திரும்பவும் அப்பொல்லோவைப்பற்றி தீத்து 3:13இல் குறித்துள்ளான்.

« Prev 40 / 564 Next »