« Back to word list

அம்மோன், அம்மோனியர் (Ammon)

(என் நாட்டவன்)

லோத்துக்குப் பிறந்த இரண்டாம் மகனின் பெயர் பென்னம்மி (ஆதி. 19:38). இவனுடைய சந்ததியார் அம்மோனியர். இவர்கள் மோவாப் தேசத்துக்கும், யாப்போக் ஆற்றுக்குமிடையே குடியேறி யிருந்தார்கள்.

இஸ்ரவேல் பிரயாணம் பண்ணுகையில் இவர்கள் மோவாபிய ரோடு கூடி இஸ்ரவேலைச் சபிக்கும்படி பிலேயாமை வரவழைத் தார்கள். இதினிமித்தம் இவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்று பத்துத் தலைமுறை மட்டும் கர்த்தர் சொன்னார் (உபா. 23:3-6).

நியாயாதிபதிகளின் நாள்களில் அம்மோனியர் இஸ்ரவேல் மேல் யுத்தம் செய்தார்கள். அப்பொழுது கீலேயாத்திய மூப்பர் யெப்தாவைத் தோப் தேசத்திலிருந்து அழைத்து, அவனைத் தங்களுக்குத் தலைவனாக்கி, யுத்தத்துக்கு அனுப்பினார்கள். அவன் போய் அவர்களைத் தோற்கடித்தான் (நியா. 11:4-33).

பின்பு நாகாஸ் என்னும் அம்மோனியன் கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றுகைபோட்டபோது, சவுல் அவர்களை முறியடித்தான் (1 சாமு.11:1-11).

அம்மோனிய இராஜாவாகிய நாகாஸின் மகன் இராஜாவானபோது, தாவீது அவனுக்குத் தயை செய்யும்படி தனது ஆனூன் ஊழியக்காரரை அனுப்பின வேளையில், அவன் அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான். இதினிமித்தம் யுத்தம் உண்டாகி, அம்மோனியர் தோற்கடிக்கப்பட்டார்கள் (2 சாமு. 10:6-14).

அதின்பின் யோவாப் அம்மோனியருடைய ரப்பா பட்டணத்தின் மேல் யுத்தம் செய்து, இராஜதானியைப்பிடித்த பின், தாவீது போய், அவர்களுடைய இராஜாவின் கிரீடத்தை எடுத்துக்கொண்டு. ஜனங்களையும் கொடூரமான அடிமை வேலைக்குட்படுத்தினான் (2 சாமு.12:26-31).

சாலொமோன் அம்மோன் ஸ்திரீகளின்மேல் ஆசை வைத்து அவர்களோடு ஐக்கியப்பட்டதுமல்லாமல், அவர்களுடைய அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான் (1 இரா. 11:1-6).

ரெகொபெயாமின் தாய் ஒரு அம்மோனிய ஸ்திரீ (1 இரா. 14:21; 2 நாளா. 12:13)

யோசபாத்துக்கு விரோதமாய் மோவாபியரும், அம்மோனியரும் வந்தபோது தோற்கடிக்கப்பட்டார்கள் (2 நாளா. 20:22).

உசியாவும், யோதாமும் இவர்களைப் பகுதி கட்டச்செய்தார்கள் (2 நாளா. 26:8; 27:5)

அம்மோனியரும், வேறு ஜாதிகளும் யோயாக்கீமுக்கு விரோதமாய் யுத்தம் செய்தார்கள் (2 இரா. 24:2).

இஸ்ரவேலும், யூதாவும் சிறைப்பட்டுப்போன வேளையில் அம்மோனியர் அவர்களை நிந்தித்ததினிமித்தம் அவர்கள்மேல் தேவ தண்டனை வருமென்று எசேக்கியேல் கூறினான் (எசே. 25:1-7).

சிறையிருப்பின் பின்பும், எருசலேமின் அலங்கங்கள் கட்டப்பட்ட போதும் இவர்கள் தடையாயிருந்தார்கள் (நெகே. 4:6,7).

இஸ்ரவேலர் இந்த ஜாதியா ரோடு சம்பந்தம் கலந்ததைப் பற்றி எஸ்றாவும், நெகேமியாவும் கண்டித்தார்கள் (எஸ்றா 9:1,2; நெகே.13:21,25).

அம்மோன் புத்திரர் மேலும், அவர்கள் தேசத்தின் மேலும் வரப்போகிற தேவ தீர்ப்பைக் குறித்து தீர்க்கதரிசிகள் கூறினார்கள் (எரே. 49:1-6; எசே. 21:28-32; ஆமோஸ் 1:13; செப். 2:8,9).

« Prev 45 / 564 Next »