« Back to word list

அரிஸ்தர்க்கு (Aristarchus)

தெசலோனிக்கேயிலிருந்த ஒரு மக்கெதோனிய தேசத்தான். பவுலுக்கு வழித்துணையாய்வந்த இவனையும், எபேசுவில் தட்டாரால் உண்டான கலகத்தில், ஜனங்கள் இழுத்துக்கொண்டு அரங்க சாலைக்குப் போனார்கள் (அப். 19:29).

பின்பு இவன் பவுலோடு கிரேக்க தேசத்திலிருந்து மக்கெதோனியா வழியாய் எருசலேமுக்குப் போனான் (அப். 20:24). பவுல் ரோமாபுரிக்குப் போனபோதும் கூடப்போனான் (அப். 27:2). பின்பு

காவலிலும் இருந்தான் (கொலோ. 4:10). பவுல், "என்னோடுகூட காவலிருக்கிற அரிஸ்தர்க்கு" என்கிறான் (பிலே. 24). நீரோ (Nero) ராயன் நாள்களில் இவன் இரத்தசாட்சியாய்க்

கொல்லப்பட்டான் என்கிற பாரம்பரியமுண்டு.

« Prev 48 / 564 Next »