« Back to word list

அர்தசஷ்டா (Artaxerxes)

(மேன்மையான இராஜா)

பூர்வீக பெர்சிய இராஜாவாகிய அகாஸ்வேரு அல்லது சஷ்டா என்பவனின் மகன். இவன் கி.மு. 465 முதல் 424 வரை அரசாண்டான். நீண்ட கையுள்ளவன் என்றும் அழைக்கப்பட்டான். அவனுக்கு நீண்ட கைகளிருந்ததினாலோ, அல்லது அவனுடைய விசாலமான இராஜ்யத்தின் நிமித்தமோ இந்தப் பெயர் வந்திருக்கலாம்.

இவனுடைய ஆளுகையின் ஏழாம் வருடத்தில் சிறைப் பட்டிருந்த யூதரை இரண்டாம் முறையும் எருசலேமுக்குக் கொண்டு போகும்படி உத்தரவு கொடுத்தான் (எஸ்றா. 7-ஆம் அதிகாரம்)

இருபதாம் வருஷத்தில் பரிசுத்த நகரத்தின் அலங்கங்களைக் கட்டும்படி, நெகேமியாவுக்கும் வேறு யூதர்களுக்கும், உத்தரவு அருளினான் (நெகே.2:1-8).

« Prev 50 / 564 Next »