அர்னோன் (Arnon)
(விரைந்தோடும் வெள்ளம்)
கிழக்குப் பக்கத்திலிருந்து சாக் கடலுக்குள் விழுகிற ஓர் ஆறு. அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை (எண். 21:13, 26). தேசம் பங்கிடப்பட்டபோது, அர்னோன் ரூபன் கோத்திரத்துக்கும், மோவுபுக்கும் இடையிலுள்ள எல்லையாயிற்று (யோசுவா 13:15,16; நியா. 11:18).
இந்த நதியில் அநேக துறைகளிருந்ததாகத் தெரிகிறது (ஏசாயா. 16:2).