« Back to word list

அலெக்சந்தர் (Alexandar)

(ஜனங்களுக்கு உதவிக்காரன்)

மக்கெதோனியா இராஜாவாகிய பிலிப்பு என்பவனின் மகன். உலகத்தை வென்ற "மகா அலெக்சந்தர்” எனப்பட்டவன். இவன் கி.மு. 336 முதல் 326 வரை மக்கெதோனியாவில் இராஜ்யபாரம் பண்ணினான்.

தொடக்கத்தில் கிரேக்க தேசத்தைக் கீழ்ப்படுத்தினதின்பின், தீரு,காசா, எகிப்து முதலிய தேசங்களைப் பிடித்துக்கொண்டு வட இந்தியா மட்டும் போயிருந்தான்.

பாரம்பரியத்தின்படி இவன் எருசலேமுக்கும் போனதாகச் சொல்லப்படுகிறது. அச்சமயம் பிரதான ஆசாரியனாயிருந்த யதுவா (Jaodua - நெகே. 12:11) என்பவன் அலங்கார வஸ்திரங்கள் தரித்துக் கொண்டு தன்னுடைய மற்ற ஆசாரியர் எல்லாரோடுங்கூட அலெக்சந்தரை சந்திக்கப் போனானென்றும், அப்பொழுது அவன் இவர்களைப் பார்த்து, மனதில் உணர்த்தப்பட்டு கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்தினானென்றும் தெரியவருகிறது.

இவன் திரும்பித் தன் தேசத்துக்குப் போகிற வழியில் பாபிலோனியாவில் காய்ச்சல் பிடித்து மரித்தான்.

2. சிரேனா ஊரானாகிய சீமோனின் மகன். இவன் இயேசுவுடைய சிலுவையைச் சுமக்க பலவந்தம் பண்ணப்பட்டான் (மாற்கு. 15:21).

3. பிரதான ஆசாரியருடைய குடும்பத்தைச் சேர்ந்தவன். பேதுருவையும், யோவானையும் விசாரணை செய்தவர்களிலொருவன் (அப். 4:6

4. எபேசுவில் கலகம் நடந்த வேளையில் பவுலோடிருந்தவர் களில் ஒருவன் (அப். 19:33).

5. எபேசுவிலிருந்த ஒரு கிறிஸ்தவன். பின்பு இவன் விசுவாசத்தை சேதப்படுத்தி, வேதப் புரட்டனானதினிமித்தம், பவுல் அவனைச் சபையிலிருந்துத் தள்ளிவிட்டான் (1 தீமோ 1:20).

6. கன்னானாகிய அலெக்சந்தர் பவுலுக்கு வெகு தீமை செய்தவன் (2 தீமோ 4:14).

« Prev 54 / 564 Next »