அர்வனா (Arauna)
(கர்த்தர் உறுதியாயிருக்கிறார்)
தாவீது இஸ்ரவேலை இலக்கம் பார்த்ததினால், கொள்ளை நோயுண்டானபோது காத் தீர்க்கதரிசி கர்த்தருக்குப் பலியிடும்படி, தாவீதுக்கு யோசனை சொன்னான். அதின்படி தாவீது எபூசியனாகிய அர்வனாவின் களத்தை கிரயத்துக்கு வாங்கி, பலி செலுத்தினான். அது மோரியா மலை மேலிருந்தது (2 சாமு. 24:15-25; 1 நாளா. 21:15-18). பிற்பாடு சாலொமோன் தேவாலயத்தை அந்த இடத்திலேயே
கட்டினான் (2 நாளா. 3:1).