ஆகீஸ் (Achish)
(பாம்பாட்டி)
இவன் காத்தின் இராஜா. மாயோகின் குமாரன் (1 சாமு. 27:2), மாக்காவின் குமாரன் என்று 1 இரா. 2:39இல் குறித்துள்ளது. "அபிமெலேக்" என்று சங். 34ன் தலைப்பில் சொல்லியுள்ளது.
தாவீது சவுலினால் துன்புறுத்தப்பட்ட நாள்களில் தப்பியோடி ஆகீஸிடம் போனான். அங்கே அவன் கோலியாத்தைக் கொன்ற தாவீதென்று வெளிப்பட்டபோது ஒரு பைத்தியக்காரன்போல் செயலாற்றித் தப்பிக்கொண்டான் (1 சாமு. 21:10-15).
பின்னும் ஒருதடவை சவுலுக்குத் தப்பிக்கொள்ளும்படி யோசித்து, தாவீது தன்னோடிருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு ஆகிஸிடம் போனான். ஆகீஸ் அவனை ஏற்றுக்கொண்டு சிக்லாக் என்னும் பட்டணத்தை அவனுக்குக் கொடுத்தான் (1 சாமு. 27:6).
அந்நாள்களில் பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் செய்ய ஆயத்தமானபோது தாவீதும் ஆகிஸோடு போனான். ஆனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அதை விரும்பாததினால், தாவீது திரும்பி
போய்விட்டான். (1 சாமு. 29:1-11).
பிற்பாடு சவுல் மரித்தபின், தாவீது இவ்விடமிருந்து எப்ரோ னுக்குப்போய் இராஜாவானான் (2 சாமு. 2:1).