« Back to word list

ஆசாப் (Asaph)

(சேர்க்கிறவன்)

1. லேவியின் குமாரனாகிய கெர்சோனின் சந்ததியான். பெரகியாவின் குமாரன் (1 நாளா. 6:39). தாவீது உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுபோகையில், இவன் கைத் தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினான் (1 நாளா. 15:17-19).

பெட்டியைக் கூடாரத்துக்குள் வைத்தபின், கர்த்தரைத் துதித்துப் பாடுவதற்கு, தாவீது இவனைத் தலைவனாய் ஏற்படுத்தினான் (1நாளா. 16:4,5).

ஆசாப் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனென்றும், ஞான திருஷ்டிக் காரனென்றும், சொல்லப்படுகிறது (1 நாளா. 25:2; 2 நாளா. 29:30).

சாலொமோன் தேவாலயத்தைப் பிரதிஷ்டை செய்தவேளையில் ஆசாபும் அவன் கூட்டத்தாரும் கர்த்தரைத் துதித்துப் பாடினார்கள் (2 நாளா. 5:12). இரண்டாம் தேவாலயத்தில் கீதவாத்தியம் பாடின மூன்று கூட்டத்தாரில் ஒன்றின் தலைவன் இவன்.

எசேக்கியாவின் நாள்களில் ஆசாப் பாடின வார்த்தைகளால் கர்த்தரைத் துதித்தார்கள் (2 நாளா. 29:30).

இவனுடைய புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர் பாடகராக இருந்தார்கள் (எஸ்றா. 2:41). எஸ்றாவின் நாள்களில் ஆலயத்தின் அஸ்திபாரம் போடுகையில் கர்த்தரைத் துதிக்கும்படி ஆசாபின் குமாரர் நிறுத்தப்பட்டார்கள் (எஸ்றா. 3:10).

ஆசாப் 50,73-83-ஆம் சங்கீதங்களின் ஆக்கியோன் எனப்படுகிறது.

2.ஆசாப், யோவாக் என்னும் எசேக்கியா இராஜாவின் ஒரு கணக்கனின் தகப்பன் (2 இரா. 18:18).

3. பெர்சிய இராஜாவின் வனத்துக்குக் காவலாளன் (நெகே. 2:8).

« Prev 66 / 564 Next »