« Back to word list

ஆசியா (Asia)

தற்காலத்தில் ஆசியா எனப்படும் தேசம், பழைய புதிய ஏற்பாடுகளில் குறித்துள்ளதல்ல. வேதாகமத்தில் ஆசியா என்பது தற்காலத்து சின்னஆசியாவில் மேற்பாகத்திலுள்ள ஒரு மாகாணத்தைக் குறிக்கிறது. எபேசு அதன் தலைநகரமாயிருந்தது.

கிரேக்கருக்குக் கீழிருந்த இந்தத் தேசம் கி.மு. 133இல் மூன்றாம் அற்றலஸ் (Attales III) என்பவனால் ரோமருடைய ஆளுகைக் குட்படுத்தப்பட்டது. அக்காலத்தில் இது ஒரு செழிப்பான நாகரீக முள்ள, ஜனம் நெருங்கிய தேசம். ரோமர் இதை வெவ்வேறு மாகாணங்களாகப் பிரித்து, தேசாதிபதிகளை நியமித்து அரசாண்டார்கள் (அப். 19:31), ஜனங்களால் தெரிந்துக்கொள்ளப் பட்டவர்கள் தலைவராயிருந்து, பண்டிகைக் கொண்டாட்டங்கள், விளையாட்டு முதலியவைகளை நடத்தினார்கள். அவர்களில் சிலர் பவுலுடைய சிநேகிதராயிருந்தார்கள். இதினிமித்தம் அவனுடைய ஊழியத்துக்கு இடம் கிடைத்து விருத்தியடைந்தது.

ஆகவே தொடக்கத்தில் ரோம அரசாட்சி ஏற்படுத்தப்பட்ட இடங்களிலேயே, கிறிஸ்து மார்க்கம் பரவிற்று. பெர்கமு, சிமிர்னா, எபேசு என்னும் இடங்களில் சபைகளும், கோவில்களும் உண்டாயின. பின்பு சர்தை, தியத்தீரா, பிலதெல்பியா என்னும் இடங்களில் சபைகள் எழும்பின. லவோதிக்கேயாவிலிருந்த சபைக்கும் பவுல் ஒரு நிருபம் எழுதினான் (கொலோ. 4:16).

பெந்தெகொஸ்தே நாளில் ஆசியா கேசத்தார் எருசலேமில் வந்திருந்தார்கள் (அப். 2:9).

ஸ்தேவான் கொல்லப்பட்டவேளையிலும் இவர்கள் அங்கிருந்தார் கள் (அப். 6:9).

பவுலின் பிரசங்கத்தினால் ஆசியாவிலுள்ள யூதரும், கிரேக்கரும் குணப்பட்டார்கள் (அப். 19:10).

ஆசியா முழுமையும், தியானாளைச் சேவிக்கிறதாகச் சொல்லப் பட்டது (அப். 19:27).

பேதுரு தன்னுடைய நிருபத்தில் ஆசியாவில் சிதறியிருந்தவர் களையும் குறிக்கிறான் (1 பேதுரு. 1:1).

யோவான் தரிசனங்கண்ட நாள்களில் ஆசியாவில் ஏழு சபைகளிலிருந்தன (வெளி. 1:4).

« Prev 67 / 564 Next »