« Back to word list

ஆபேத் நேகோ (Abed Nego)

(நேபோ என்னும் தேவனின் ஊழியன்)

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுபோன யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களுக்கு மறுபெயர் கொடுத்தபோது அசரியாவுக்கு ஆபேத் நேகோ எனப் பெயரிடப்பட்டது (தானி. 1:7).

பின்பு, தானியேலின் வேண்டுதலின்படி ஆபேத்நேகோ மாகாண விசாரிப்புக்காரனாய் நியமிக்கப்பட்டான் (தானி. 2:49).

இராஜா ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, அதை ஜனங்க ளெல்லாரும் பணிந்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிட்ட போது, இந்த யூத வாலிபர் மறுத்ததினால், அக்கினிச் சூளையில் போடப்பட்டார்கள். கர்த்தர் அவர்களைக் காத்தார். அப்பொழுது இராஜா அவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்பண்ணி, இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை யென்றான். பின்பு அவர்களைப் பாபிலோன் தேசத்தில் உயர்த்தினான் (தானி. 3:1-30).

« Prev 75 / 564 Next »