ஆபேல் (Abel)
(சுவாசம்)
ஆதாம், ஏவாள் என்பவர்களுக்குப் பிறந்த இரண்டாம் மகன். இவனுக்கு மூத்தவன் காயீன். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனா னான். காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான் (ஆதி. 4:2).
இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டுவந்தார்கள். ஆபேலின் காணிக்கை அங்கீகரிக்கப்பட்டது. காயீனின் காணிக்கை அங்கீகரிக்கப்படவில்லை. இதினிமித்தம் காயீன் ஆபேலைக் கொன்றான் (ஆதி. 4:3-8). கர்த்தர் காயீனைச் சந்தித்து, "நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ?” என்று சொல்லி, அவன்மேல் வரும் தண்டனையைக் கூறினார். அவன் அவர் சந்நிதியை விட்டுப் போனான் (ஆதி. 4:9-16).
இயேசு ஆபேலைப் பற்றி, முதன் முதல் இரத்தச் சாட்சியாய் மரித்த நீதிமான் என்றார் (மத். 23:35). மேலும் விசுவாசத்தினால், ஆபேல் மேன்மையான பலியைச் செலுத்தி, நீதிமான் என்று சாட்சி பெற்றான் (எபி.11:4). காயீன் பொல்லாங்கனால் உண்டாயிருந்தான் என்றும், ஆபேலின் கிரியைகள் நீதியுள்ளவைகளாயிருந்தது என்றும், சொல்லப்பட்டுள்ளது (1 யோவான் 3:12).
மனுஷ ஜாதியாருக்குள் நன்மை செய்வோர், தீமை செய்வோர் என இரு பகுதியாருண்டு. அவர்களுக்கு இவ்விரு சகோதரர் முன்னடையாளமாயிருக்கிறார்கள்.
2.இந்தப் பெயருள்ள இடங்களுமுண்டு (1 சாமு. 6:18; 2 சாமு. 2:14). இநதச் சொல்லைச் சேர்த்து தொடற்சொற்கள் பல உண்டு. 'ஆபேல் சித்தீம்' (எண். 33:49). பெத்மாக்கா என்னும் ஆபேல் (1 இரா. 15:20). ஆபேல் மெகொல்லா (1 இரா. 4:12).