« Back to word list

ஆயி (Ai)

(பாழ்குவியல்)

1. பெத்தேலுக்குக் கிழக்குப் பக்கமாயுள்ள ஒரு பட்டணம் (யோசுவா. 7:2).

ஆபிரகாம் இந்த இடத்துக்குக் கிட்ட பாளயமிறங்கியிருந்தான் (ஆதி. 12:8).

யோசுவா இஸ்ரவேலரோடு இதைப் பிடிக்கப்போன வேளையில், முதல் தோல்வியடைந்து, பின்பு அதைப் பிடித்து, இராஜாவையும், ஜனங்களையும் கொன்று, பட்டணத்தையும் சுட்டெரித்தார்கள் (யோசுவா 7:2-5; 8:1-28).

சிறையிருப்பின் காலத்துக்குப் பின்பும் இஸ்ரவேலர் வந்து இங்கே குடியேறினதாகத் தெரிகிறது (எஸ்றா. 2:28; நெகே. 7:32).

2.எஸ்போனோடு சம்பந்தப்பட்ட ஒரு எமோரியரின் பட்டணம் (எரே. 49:3).

« Prev 81 / 564 Next »