ஆயலோன் (Ajalon)
1. எருசலேமுக்கு வடமேற்கு பக்கமாய் பதினாலு மைல் தூரத்திலுள்ள, தாண் கோத்திரத்தைச்சேர்ந்த ஒரு சம பூமி. இவ்விடத்தில் இஸ்ரவேலர் எமோரியரைத் தோற்கடித்தபோது யோசுவா விண்ணப்பம் பண்ணினதினால் சூரியன் கிபியோன் மேலும், சந்திரன் ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நின்றது (யோசுவா. 10:12).
2. இந்தச் சமபூமிக்குக்கிட்ட கோகாத்தியருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு லேவிய பட்டணம் இருந்தது (யோசுவா. 21:20,24). தேசம் பிரிக்கப்பட்டபொழுது இது பென்யமீன் கோத்திரத்துக் காயிற்று (1 நாளா. 8:13). ஆனால் ஆகாசின் நாள்களில் பெலிஸ்தர் இதைக் கைப்பற்றினார்கள் (2 நாளா. 28:18).
3. ஆயலோன் ஊர் செபுலோன் தேசத்திலுள்ளது. நியாயாதிபதி யாகிய ஏலோன் அங்கே அடக்கம் பண்ணப்பட்டான் (நியா. 12:12).