இக்கோனியா (Iconium)
(சிறிய விக்கிரகம்)
இது சின்ன ஆசியாவில் (Asia Minor) லீஸ்திராவுக்குக் கிட்ட இருந்த ஒரு பூர்வீகப் பட்டணம். இப்போதும் இது ஒரு பெரிய பட்டணமாக இருக்கிறது.
பவுலும், பர்னபாவும், முதலாம் சுவிசேஷ பிரயாணத்தில் இங்கேபோய் பிரசங்கித்தார்கள். அநேக அற்புதங்கள் செய்யும்படி கர்த்தர் அனுக்கிரகம்பண்ணினார். யூதரால் பகை உண்டானபோது சுற்றுப்புறங்களுக்கு ஓடிப் போனார்கள் (அப். 14:1-7),
லீஸ்திராவில் கல்லெறியப்பட்ட பின்பும், பவுலும் பர்னபாவும் திரும்பி இந்த இடத்துக்குவந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி னார்கள் (அப். 14:19-22).
இரண்டாம் சுவிசேஷ பிரயாணத்திலும், பவுல் இவ்விடம் போயிருந்தான். அச்சமயத்தில் இக்கோனியா சகோதரரால் நற்சாட்சி பெற்ற தீமோத்தேயுவைக் கண்டு அவனையுங் கூட்டிக்கொண்டுபோனான் (அப். 16:1-7).
பின்பு இவ்விடத்தில் தனக்குண்டான துன்புறுத்தல்களைப்பற்றி தீமோத்தேயுவுக்குப் பவுல் எழுதியுள்ளான் (2 தீமோ. 3:11).