இசக்கார் (Issachar)
(கூலி வேலை செய்பவன்)
இவன் யாக்கோபின் ஒன்பதாம் மகன். லேயாள் பெற்ற ஐந்தாம் மகன் (ஆதி.30:14-18). யாக்கோபு எகிப்துக்குப் போகுமுன் இவனுக்கு நான்கு குமாரர் இருந்தார்கள் (ஆதி. 46:13).
சீனாயில் கணக்கெடுத்தபோது இவர்களில் ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர் இருந்தார்கள் (எண். 1:29). பிரயாணத்தில் இவர்கள் யூதாவுக்கருகே பாளயமிறங்கினார்கள் (எண். 2:5).
இரண்டாம் முறை கணக்கெடுத்தபோது இவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேராயிருந்தார்கள் (எண். 26:25).
யோர்தானைக் கடந்தபின் ஆசீர்வாதம் கூற இவர்கள் கெரிசீம் மலையில் நின்றார்கள் (உபா.27:12).
மோசே சொன்ன ஆசீர்வாதத்தில் இவர்கள் கடலிலுள்ள சம்பூரணத்தை அனுபவிப்பார்கள் என்றான் (உபா.33:18,19).
யாக்கோபின் கடைசி வார்த்தைகளில், இவர்கள் இளைப்பாறுதலை நாடுவார்களென்றான் (ஆதி. 49:14,15).
தேசம் பிரிக்கப்பட்ட வேளையில் யெஸ்ரயேல் சமபூமி பதினாறு பட்டணங்களோடு இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் கடற்கரை மட்டும் இவர்களுக்குப் பூமி கிடைத்ததாகத் தெரியவில்லை.
தெபொராளும்,பாராக்கும் இந்தக் கோத்திரத்தார். சிசெராவோடு நடந்த யுத்தத்தில், இவர்கள் விசேஷ பங்கெடுத்தார்கள் (நியா. 5:15).
நியாயாதிபதியாகிய தோலாவும், இராஜாக்களாகிய பாஷா, ஏலா என்பவர்களும் இந்தக் கோத்திரத்தார் (நியா. 10:1; 1 இரா. 15:27).
தாவீது ஜனத்தொகை எடுத்தபோது இந்தக் கோத்திரத்தில் எண்பத்தேழாயிரம்பேர் இருந்தார்கள் (1 நாளா. 7:5).
எப்ரோனில் தாவீதினிடம் வந்த இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியதை அறிந்து யோசனை சொல்லத்தக்க இருநூறுபேர் இருந்தார்கள் (1 நாளா. 12:32).
சாலொமோனின் மணியக்காரரில் ஒருவன் இசக்காரில் இருந்தான் (1 இரா. 4:7). எசேக்கியா நடத்தின பஸ்கா பண்டிகைக்கு இவர்களும் போயிருந்தார்கள் (2 நாளா. 30:18). எசேக்கியேலின் தரிசனத்திலும், யோவானின் வெளிப்படுத்தலிலும், இவர்கள் குறிக்கப்படுகிறார்கள் (எசே. 48:25; வெளி. 7:7).
2. தாவீதின் நாள்களில் காவல் காக்கிறவர்களின் வகுப்பைச் சேர்ந்த ஒரு கோராகியன் (1 நாளா. 26:5),