« Back to word list

இத்தாமார் (Ithamar)

(பனைமரத் தீவு)

ஆரோனுக்கு எலிசபாள் பெற்ற கடைசி மகன் (யாத். 6:23; 1 நாளா. 6:3, 24). இவனும் ஆசாரிய ஊழியத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட்டான் (யாத். 28:1; 1 நாளா. 24:2). பிரயாண காலத்தில் லேவியரின் ஊழியத்துக்கடுத்த பொருள்கள் இவன் கையில் கொடுக்கப்பட்டன (யாத். 38:21; எண். 4:28).

கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் செய்யவேண்டிய ஆசரிப்புக் கூடார பணிவிடைக்கு, இவன் விசாரணைக்காரனா யிருந்தான் (எண். 4:28, 33). இவனுடைய புத்திரர் பிற்காலத்தில் தேவனுக்கடுத்த காரியங்களை நடத்தும் பிரபுக்களாயிருந்தார்கள் (1 நாளா.24:5).

எஸ்றாவோடு திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணையில் இத்தாமாரின் மகன் தானியேல் குறிக்கப்பட்டிருக்கின்றான் (எஸ்றா. 8:2).

« Prev 89 / 564 Next »