இமெனேயு (Hymenaeus)
பவுல் குற்றஞ்சாட்டின ஒரு பொய் போதகன். இவனும், அலெக்சாந்தரும் விசுவாசத்தைப் புரட்டினவர்களென்று பவுல் சொல்லுகிறான் (1 தீமோ. 1:19-20). இவனும், பிலேத்தும் சரீர உயிர்த்தெழுதல் இல்லையென்று சொல்லி சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுகிறார்களென்று பவுல் கூறுகிறான் (2 தீமோ. 2:17,18).