« Back to word list

உசியா (Uzziah)

(கர்த்தர் பலமுள்ளவர்)

இவனுடைய மறு பெயர் அசரியா. அமத்சியா கொல்லப்பட்ட போது, யூதா ஜனங்கள் பதினாறு வயதுள்ள, அவன் மகனாகிய உசியாவை இராஜா வாக்கினார்கள். உசியா ஏலாதைக் கட்டி, யூதாவின் வசமாக்கினான் (2இரா. 14:21,22; 15:1,2).

அவன் ஐம்பத்திரண்டு வருடம் எருசலேமில் அரசாண்டான். குஷ்டரோகியானபோது அவனுடைய மகன் யோதாம் ஜனங்களை நியாயம் விசாரித்தான். இராஜாக்களின் புத்தகத்தில் அவன் கர்த்தர் பார்வையில் செம்மையாய் நடந்தானென்றும், நாளாகமப் புத்தகத்தில் அவன் நடத்தின யுத்தங்களைப் பற்றியும், கட்டின கோபுரங்களைப் பற்றியும், விபரமாய்க் குறித்துள்ளன (2 இரா. 15:1-5; 2 நாளா.26:1-4).

அவன் பலப்பட்டபோது கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபங்காட்ட ஆலயத்தில் பிரவேசித்தான்.ஆசாரியர் அவனை எதிர்த்த வேளையில் குஷ்டரோகம் அவன் நெற்றியில் தோன்றியது. அவன் தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணி மரித்தான் (2 நாளா. 26:16-23).

அவனுடைய நாள்களில் குறிப்பிடத்தக்க பூமி அதிர்ச்சி உண்டானது (ஆமோஸ். 1:1). இது சிறையிருப்புக் காலத்தின் பின்னும் நினைவு கூறப்பட்டது (சக. 14:5).

2. உசியா என்ற பெயருள்ள ஒரு லேவியனிருந்தான் (1 நாளா.6:23).

3. அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணின ஓர் ஆசாரியன் (எஸ்றா.10:21).

4. யூதா புத்திரரில் ஒருவன் (நெகே. 11:4).

« Prev 104 / 564 Next »