« Back to word list

ஈராம் (Hiram)

(மேன்மையான பிறப்புடையவன்)

1. இவன் தீருவின் இராஜா. (கி.மு. 1015) தாவீது, சாலொமோன் என்பவர்களோடு சிநேகிதமாயிருந்தான். தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்த பின், இவன் அவனுக்கு ஒரு வீடு கட்டும்படி மரங்களையும், தச்சரையும் கொடுத்தான் (2 சாமு. 5:11; 1 நாளா. 14:1),

சாலொமோன் ஆலயம் கட்டும்படி இவன் வியாபார முறையில் ஒழுங்கு செய்துகொண்டு, சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுரு மரங்களையும், தேவதாரு விருட்சங்களையும் லீபனோனி லிருந்து அனுப்பிவந்தான். இதற்குப் பதிலாக சாலொமோன் கோதுமையையும், ஒலிவ எண்ணெயையும் கொடுத்தான் (1 இரா. 5:2-11).

இருபது வருடங்களின் பின் ஆலயமும் கட்டி முடித்தபோது, ஈராம் செய்த உதவிக்காக சாலொமோன் அவனுக்கு கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தபோது அவன் அவைகளில் பிரியப்படவில்லை. ஈராம் இதற்குப் பதிலாக பொன் அனுப்பியிருந்தான் (1 இரா. 9:10-14).

ஈராமுடைய கப்பல்கள் சாலொமோனுடைய கப்பல்களோடு கூடப்போய், பொன், வெள்ளி முதலியவைகளைத் தர்ஷிசிலிருந்துச் சாலொமோனுக்குக் கொண்டு வந்தன (1 இரா. 10:22; 2 நாளா. 9:21). சாலொமோனுடைய கப்பலில், ஈராமுடைய கப்பலாட்கள் ஒப்பீருக்குப்போய் சாலொமோனுக்குப் பொன் கொண்டு வந்தார்கள் (1 இரா.9:26-28; 2 நாளா. 8:17-18).

சாலொமோன் சீதோனிய ஸ்திரீகள் மேலும் ஆசை வைத்தான் (1 இரா. 11:1). அவன் ஈராம் குடும்பத்தில் விவாக சம்பந்தம் கலந்திருப்பான் என்று தெரிகிறது.

2. இவன் தீரு தேசத்து கன்னான். நப்தலி கோத்திரத்து ஒரு கைம்பெண்ணின் மகன். சாலொமோன் இவனைக் கொண்டு தேவாலயத்துக்கடுத்த வெண்கலத் தூண்களையும், வேறு வேலைகளையும் செய்வித்தான் (1 இரா. 7:13-15).

« Prev 103 / 564 Next »