உரியா (Uriah)
(கர்த்தரின் வெளிச்சம்)
1. இவன் ஓர் ஏத்தியன். தாவீதின் பராக்கிரமசாலிகளில் ஒருவன். இவன் பத்சேபாள் என்ற ஒரு சௌந்தரவதியான, யூத ஸ்திரீயை விவாகம் செய்திருந்தான். இஸ்ரவேலருக்கும், அம்மானியருக்கு மிடையில் நடந்த யுத்தத்தில், யோவாப், ராப்பாவை முற்றுகை போட்ட வேளையில் உரியா அவனுக்கு கீழ் சேலை செய்தான். எருசலேமிலிருந்த அவனுடைய மனைவியைத் தாவீது இச்சித்து, உரியா சாகும்படி அவனை மும்முரமாய் நடக்கிற போர் முகத்தில் நிற்கச் செய்யும்படி, தாவீது யோவாபுக்கு எழுதினான். யோவாப் அவ்விதமே செய்ததினால் உரியா மரித்தான். அதன்பின் உரியாவின் மனைவியாகிய பத்சேபாளைத் தாவீது தனக்கு மனைவியாக்கி கொண்டான். அவள் தாவீதுக்கு பெற்ற ஆண் பிள்ளையும் மரித்தது (2 சாமு.12:15). தாவீது இந்தக் காரியத்தில் மாத்திரம் கர்த்தரின் கட்டளையை மீறினான் (1 இரா. 15:5),
இந்த உரியாவின் மனைவி சாலொமோனின் தாய் (மத். 1:6).
2. யூதாவின் இராஜாவாகிய ஆகாசின் நாள்களிலிருந்த ஓர் ஆசாரியன். ஆகாஸ் தமஸ்குவிலிருந்த ஒரு பலிபீடத்தின் மாதிரியை இவனுக்கு அனுப்பினபோது, இவன் அதைப் போன்ற ஒரு பலிபீடத்தை எருசலேமில் கட்டினான். பின்பு அதன்மேல் பலிகள் செலுத்தப்பட்டன (2 இரா. 16:10-16).
ஏசாயா எழுதின தீர்க்கதரிசனத்திற்கு இவன் சாட்சி வைத்தான் (ஏசாயா.8:2).
2.கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் மகன் உரியா, ஒரு தீர்க்கதரிசி. இவன் யூதாவுக்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் சொன்னானென்று யோயாக்கீம் இராஜா இவனைக் கொன்று போட்டான் (எரே. 26:20-23).
4. மெரேமோத்தின் பிதா (எஸ்றா. 8:33; நெகே. 3:4).
5.நியாயப்பிரமாணம் வாசிக்கப்படுகையில் எஸ்றாவோடு பிரசங்க பீடத்தின்மேல் நின்றவன் (நெகே. 8:4).