ஊசா (Uzza)
(பெலன்)
1. கீரீயாத் யாரீமிலிருந்த அபினதாபின் மகன் (1 சாமு. 7:1). தாவீது கர்த்தருடைய பெட்டியை ஒரு புது இரதத்தின் மேலேற்றி, அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு போகும்போது, அபினதாபின் குமாரர் ஊசாவும், அகியோவும் கூடப் போனார்கள். மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியால், ஊசா பெட்டியைப் பிடித்தான். இந்தத் துணிவான செய்கையினிமித்தம் அவன் பெட்டியண்டையில் செத்தான் (2 சாமு. 6:1-7). தாவீது அந்த ஸ்தலத்திற்கு பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டான் (1 நாளா. 13:7-11).
2. ஊசாவின் அரண்மனைத் தோட்டத்தில் மனாசேயும், அவன் மகன் ஆமோனும் அடக்கம் பண்ணப்பட்டார்கள் (2 இரா. 21:18-26).
3. மெராரியின் சந்ததியானாகிய ஊசா (1 நாளா. 6:29).
4. பென்யமீன் கோத்திரத்து ஏகூதின் சந்ததியான் (1 நாளா. 8:7).
5. சிறையிருப்பிலிருந்து வந்த நிதனீமியரானவர்களில் ஒருவன் (எஸ்றா. 2:43,49).