« Back to word list

ஊசாய் (Hushai)

(வேகம்)

1. தாவீது அப்சலோமுக்குத் தப்பி, எருசலேமை விட்டு மலை உச்சி மட்டும் போனபோது அர்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு அவனுக்கு எதிர்ப் பட்டான்.

தாவீது அவனை நோக்கி, திரும்பிப்போய் அப்சலோமைச் சேர்ந்து கொண்டு, அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்கும்படி, அங்கே நடக்கும் செய்திகளை, சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் மூலம் தனக்கு அறிவிக்கும்படி சொல்லியனுப்பினான். அப்படியே அவன் திரும்பிப்போனான் (2 சாமு. 15:32-37). ஊசாய் அப்சலோமிடம் போய் அவனைச் சேவிப்பேனென்று சொன்னான் (2 சாமு.16:6).

அகித்தோப்பேல் அப்சலோமுக்குச் சொன்ன ஆலோசனையைப் பார்க்கிலும், ஊசாயின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது (2 சாமு.17:5,14).

ஊசாய் தாவீதின் தோழனாயிருந்தான் (1 நாளா. 27:33). பின்பு ஊசாயின் குமாரன் பானா சாலொமோனின் மணியக்காரரில் ஒருவனாயிருந்தான் (1 இரா. 4:16).

2. நெகேமியாவின் நாள்களில் குமாரன் மதிலின் ஒரு பகுதியைக் கட்டினான் (நெகே. 3:25).

« Prev 109 / 564 Next »