எசியோன் கேபார் (Ezion Gebar)
(வல்லமையுள்ளவனின் முதுகெலும்பு)
இது சிவந்த சமுத்திரத்தருகேயுள்ள அகபா (Akabah) குடா நாட்டின் வடபக்கத்திலுள்ள ஒரு பட்டணம்.
இஸ்ரவேலர் தங்கள் பிரயாணத்தில் இவ்விடத்தில் பாளயமிறங்கினார்கள் (எண். 33:35).
சாலொமோன் இங்கிருந்த துறையில் கப்பல்களைச் செய்வித்தான் (1 இரா. 9:26; 2 நாளா. 8:17).
யோசபாத் செய்வித்த கப்பல்கள் இவ்விடத்தில் உடைந்து போயிற்று (1 இரா. 22:48; 2 நாளா. 20:36).