« Back to word list

எக்லோன் (Eglon)

(வட்டமான)

1. மோவாபியரின் இராஜா. இவன் அம்மோனியரையும்,அமலேக்கியரையும் சேர்த்துக் கொண்டு, இஸ்ரவேலரைத் தோற்கடித்து, அவர்களைப் பதினெட்டு வருஷங்களாக ஒடுக்கினான்.

கர்த்தர் ஜனங்களின் கூப்பிடுதலைக் கேட்டு பென்யமீன் கோத்திரத்து ஏகூத் என்பவனை எழுப்பினார். ஏகூத் எக்லோன் என்பவனைக் கொன்றுபோட்டு, மோவாபியரைக் கீழ்ப்படுத்தினான். தேசம் எண்பது வருடம் அமைதலாயிருந்தது (நியா. 3:12-30).

2. லாகீசுக்கு கிட்ட இருந்த ஒரு பட்டணம். இதன் இராஜா வாகிய தெபீரு அதோனிசேதேக்கோடு சேர்ந்து, கிபியோனியருக்கு விரோதமாய் யுத்தத்துக்குப் போனவேளையில், யோசுவா அவர்களைத் தோற்கடித்து, பட்டணத்தையும் சங்காரம் பண்ணினான் (யோசுவா .10:2-23,34-37; 12:12).

« Prev 115 / 564 Next »