« Back to word list

எத்தியோப்பியா (Ethiopia)

நைல் நதியின் பள்ளத்தாக்கின் மேற் பக்கமாயுள்ள ஒரு தேசம். எபிரேயர் இதைக் “கூஸ்” என்றும், கிரேக்கர் 'மரேசா' என்றும் அழைத்தார்கள்.

ஏதேன் தோட்டத்துக் கீகோன் ஆறு, எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும் என்று சொல்லப்பட்டுள்ளது (ஆதி. 2:13).துவக்கத்தில் காயீன் சந்ததியார் இங்கே குடியேறினார்கள். கி.மு. 1500-லிருந்து 500 வருடங்களாக எத்தியோப்பியா எகிப்தின் ஆளுகையின் கீழிருந்தது.

ஒன்பதாம் நூற்றாண்டில் எத்தியோப்பியனாகிய சேரா பலஸ்தீனாவுக்கு விரோதமாய் படையெடுத்து மரேசா மட்டும் வந்தான். யூதா இராஜாவாகிய ஆசா கர்த்தரை நோக்கி வேண்டிக் கொண்டபோது, கர்த்தர் அவர்களை முறியடித்ததினால் அவர்கள் ஓடிப்போனார்கள். ஆசா அவர்களுடைய பட்டணங்களைக் கொள்ளையடித்துக்கொண்டு திரும்பினான் - 2 நாளா. 14:9-15).

எத்தியோப்பிய இராஜா தீராக்கா அசீரியருக்கு விரோதமாக எசேக்கியா இராஜாவுக்கு உதவியாயிருந்தான் (2 இரா. 19:9).

கி.மு. 605-ல் நெபுகாத்நேச்சார் பார்வோன் நேகோவின் இராணுவத்தை முறிய அடித்தபோது, உதவிக்குப்போன எத்தியோப்பியரும் தோற்கடிக்கப்பட்டார்கள் (எரே. 46:9).

கம்பிசீஸ் என்பவன் எகிப்தை ஜெயித்தபோது எத்தியோப்பியாவும் பெர்சிய இராஜ்யத்துக்குக் கீழ்ப்பட்டது (எஸ்.1:1), எத்தியோப்பியா வுக்கும், அரேபியாவுக்கும் சம்பந்தம் இருந்ததாகத் தெரிகிறது (2 நாளா. 21:16).

அகாஸ்வேரு இந்து தேச முதல் எத்தியோப்பியா தேசம் வரை அரசாண்டான் (எஸ். 1:1).

« Prev 121 / 564 Next »