எத்தியோப்பிய ஸ்திரீ
மோசேயின் முதல் மனைவியாகிய சிப்போராள் மரித்தபின், அவன் எத்தியோப்பிய தேசத்து ஸ்திரீயை விவாகம் பண்ணினதினால், மிரியாமும், ஆரோனும் அவனில் குற்றம் பிடித்தார்கள் (எண். 12:1).
மோசே மிகுந்த சாந்தகுணமுள்ளவனானதால் பேசாமலிருந்தான். ஆனால் கர்த்தர் அவர்களுடைய குற்றத்தைக் கண்டித்தார் (எண். 12:5-13).
எத்தியோப்பிய மந்திரி
இவன் எத்தியோப்பியரின் இராஜ ஸ்திரீயாகிய கந்தாகேயின் மந்திரி. ஒருவேளை இவன் ஒரு யூதனாயிருந்திருக்கக்கூடும். அல்லாவிட்டால் அக்காலத்தில் அநேக யூதர் எகிப்தில் குடியேறி யிருந்ததினால், அவர்களிடமிருந்து யூத மார்க்கத்தைப்பற்றி அறிந்தவனாக இருக்கலாம்.
இவன் வேதாகமத்தை ஊக்கமாக வாசித்து பிலிப்புவினுடைய உபதேசத்தை வாஞ்சையுடன் கேட்டு கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் பெற்றதிலிருந்து ஓர் உத்தமனென்று அறியலாம் (அப். 8:26-40), பிற்பாடு இவன் அத்தேசத்தில் முதற் பிரசங்கியாயிருந்ததாகச் சொல்லப்படுகிறது.