« Back to word list

என்கேதி (Engedi)

(ஆட்டுக்குட்டியின் ஊற்று)

சாக்கடலுக்கு மேற்பக்கமாயுள்ள சுத்த நீரூற்றுள்ள ஒரு பட்டணம் (யோசுவா. 15:12). இது ஒரு செழிப்பான இடமானாலும், சுற்றிவரக் கற்பாறைகளுள்ள பாழ்தேசம். தாவீது சவுலுக்குத் தப்பிஓடி, இங்கே ஒதுக்கிடம் தேடினான் (1 சாமு. 24:1). யோசபாத்தின் நாள்களில் மோவாபியரும், அம்மோனியரும் இந்த வழியாய் யூதாவை முற்றுகை போடவந்தபோது, தோற்கடிக்கப்பட்டார்கள் (2 நாளா. 20:2).

உன்னதப்பாட்டில் குறித்துள்ள நேசர் தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்துக்கு ஒப்பிடப்படுகிறார் (உன். 1:14).

அத்சாத்சோன்-தாமார் பிற்காலத்தில் என்கேதி என்னப்பட்டது (ஆதி. 14:7; 2 நாளா. 20:2).

« Prev 123 / 564 Next »