« Back to word list

எபிரெயன் (Hebrew)

எபிரெயன் என்ற பெயர் ஏபேரின் சந்ததியானாகிய ஆபிரகாமுக்கு முதல் கொடுக்கப்பட்டது (ஆதி. 14:13). ஏபேர் என்பதின் அர்த்தம் "தூர தேசங்கள்”. ஐபிராத்து நதியின் கீழ்ப் பக்கத்திலிருந்து ஆபிரகாமும் அவன் சந்ததியாரும் நதியைக் கடந்து மேற்பக்கம் போனதினால் அங்கே இருந்தவர்கள் இவர்களை ஏபேரியர் என்று அழைத்தார்களெனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆகிலும் கோத்திரத் தலைவனாகிய ஏபேரிலிருந்து இந்தப் பெயர் வந்ததென்பது சரியாயிருக்கலாம்.

புதிய ஏற்பாட்டில் எபிரெயர் என்று பலஸ்தீனாவிலிருந்த யூதருக்கே சொல்லப்பட்டது. அவர்கள் எபிரெய பாஷையைப் பேசினார்கள். பவுல் "தான் எபிரெயரில் பிறந்த எபிரெயன்" என்றதினால், அவன் தாய், தகப்பன் இருவரும் எபிரெயர் எனத் தெரிகிறது. (பிலி. 3:5).

« Prev 124 / 564 Next »