எப்பிராயீம் (Ephraim)
செழிப்பான
யோசேப்பு, ஆஸ்நாத்து என்பவர்களின் இரண்டாம் மகன். யோசேப்பு, தான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் தன்னைப் பலுகப் பண்ணினார் என்று சொல்லி இவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான் (ஆதி. 41:50-52).
யாக்கோபு, யோசேப்பின் இரண்டு பிள்ளைகளையும் ஆசீர்வதித்த வேளையில், இளைய மகனாகிய இவனுக்கு தலைப்பிள்ளையின் ஆசீர்வாதத்தைக் கொடுத்தான் (ஆதி. 48:14, 17-20). இவன் எப்பிராயீம் கோத்திரத்து முற்பிதா.
எப்பிராயீம் வாசல்
இது எருசலேமின் அலங்கத்திலுள்ளது. இஸ்ரவேல் இராஜா வாகிய யோவாஸ் இந்த வாசல் தொடங்கி அலங்கத்தின் ஒரு பகுதியை இடித்துப்போட்டான் (2 இரா. 14:18).
எப்பிராயீம் மலை
இது எப்பிராயீம் தேசத்துக்குள்ளிருந்த மலைநாடு, சாமுவேலின் பெற்றோர் இந்தத் தேசத்தார் (1 சாமு. 1:1).
எப்பிராயீம் காடு
இங்கே அப்சலோமோடு நடந்த யுத்தத்தில் அவன் தோற்கடிக்கப் பட்டு, கொல்லப்பட்டான். இந்த இடம் மகனேயத்துக்கு அருகில் யோர்தானுக்குக் கிழக்கேயுள்ளது (2 சாமு. 18:6-9).
எப்பிராயீம் ஊர்
யூதர் இயேசுவைக் கொலை செய்ய ஆலோசனைபண்ணின போது, அவர் வனாந்தரத்துக்குச் சமீபமான எப்பிராயீம் ஊருக்குப் போனார் (யோவான். 11:54).