« Back to word list

எலிகூ (Elihu)

(அவர் கடவுளே )

1. சாமுவேலின் முற்பிதா (1 சாமு. 1:1). இவன் பெயர் எலியாப் என்றும், எலியேல் என்றும் சொல்லப்படுகிறது (1 நாளா. 6:27; 6:34).

2. மனாசே கோத்திரத்து ஆயிரத்து சேர்வைக்காரனாகிய எலிகூ, தாவீதிடம் சிக்லாகுக்குப் போனான் (1 நாளா. 12:20).

3. தாவீதின் மூத்த சகோதரனாகிய எலிகூ, (1 நாளா. 27:18) எலியாப் என்றும் அழைக்கப்பட்டான் (1 சாமு. 10:6).

4. தாவீதின் கீழ் வாசல் காக்கிறவனாயிருந்த எலிகூ ஏதோமின் சந்ததியான் (1 நாளா. 26:7).

5. யோபு தேவனில் குற்றம் சொன்னது சரியில்லையென்றும் தேவனால் வரும் தண்டனை மனுஷனுடைய நன்மைக்காகவென்றும், தேவன் இராக்கால சொப்பனங்களாலும், தரிசனங்களாலும் தமது இரகசியங்களை மனுஷருக்கு வெளிப்படுத்த நோக்கமாயிருக்கிறா ரென்றும், இவைகளை விளங்கப்படுத்த ஒருவன் தேவையென்றும் சொல்லி, நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றும் சொன்ன எலிகூ, இவன் யோபின் நான்கு சிநேகிதரிலும் இளையவன்.

மற்றவர்கள் யோபுக்கு சரியான உத்தரவு கொடுக்காததால் இவன் பேசத்துவங்கினான் (யோபு. 32:37). ஆனால் கர்த்தரோ அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப் படுத்துகிற இவன் யார்? என்கிறார் (யோபு. 38:2).

« Prev 143 / 564 Next »