எஸ்கோல் (Eshcol)
(திராட்சக் குலை)
1. மம்ரே என்ற எமோரியனின் சகோதரன். கெதர்லா கோமேரின் சேனைகளைத் தோற்கடித்து, லோத்தை மீட்டுக்கொள்ள, இவன் ஆபிரகாமுக்கு உதவியாயிருந்தான் (ஆதி. 14:13,24).
2. திராட்சப் பழங்களுக்குப் பெயர் பெற்ற, எபிரோனுக்கு அருகில் இருந்த ஒரு பள்ளத்தாக்கு. கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்க போனவர்கள், அத்தேசத்தின் செழுமையைக் காட்டும் பொருட்டாய், இவ்விடத்திலிருந்து ஒரு திராட்சக் குலையை அறுத்துக்கொண்டு போனார்கள் (எண். 13:24; 32:9; உபா. 1:24),