« Back to word list

எஸ்றா (Ezra)

(உதவி)

செசரியாவின் குமாரனாகிய எஸ்றா. பாபிலோனில் சிறை யிருந்தவன். இவன் ஆரோன் வம்சத்தவன். பெர்சிய இராஜாவாகிய அர்த்தசஷ்டாவின் காலத்தில், இவன் ஒரு தேறின வேதபாரகன். இராஜா எருசலேமுக்குப் போகும்படி யூதருக்கு உத்தரவு கொடுத்து, இவனைத் தலைவனாக ஏற்படுத்தி, தேவாலய பணிமுட்டுகளையும், பொன், வெள்ளியையும் கொடுத்தனுப்பினான்.

அதோடு, நதிக்கு அப்புறத்திலிருந்த இராஜாவின் உத்தியோகஸ்தர் எஸ்றாவுக்கு வேண்டிய பணம் கொடுக்கும்படியும் கடிதம் கொடுத்தனுப்பினான். எருசலேமில் ஆளுகை செய்வதற்கு வேண்டிய அதிகாரமும் எஸ்றாவுக்குக் கொடுக்கப்பட்டது.

எஸ்றா ஆயத்தங்கள் செய்து, ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து புறப்பட்டுப் போனான். எருசலேமுக்குப் போக நான்கு மாதங்கள் சென்றன. அங்கே போனவுடன் பலிகள் செலுத்தினான். ஒவ்வொரு கோத்திரத்துக்காக ஒவ்வொரு காளை பலி செலுத்தப்பட்டது. எல்லாரும் தேவனை ஸ்தோத்தரித்தார்கள்.

எஸ்றா அங்கே அநேக சீர்த்திருத்தங்களைச் செய்தான். முக்கியமாக, அந்நிய ஸ்திரீகளை விவாகம் பண்ணினவர்கள் அவர்களைத் தள்ளிவிடும்படி செய்தான்.

அதன்பின் எஸ்றா பெர்சியாவுக்குத் திரும்பிப்போய், பல வருடங்களின் பின், நெகேமியாவோடு திரும்பிவந்து, வேறு சீர்த்திருத்தங்களைச் செய்தான் (எஸ்றா. அதி. 7-9).

எஸ்றா ஆசாரியனாயும், வேதபாரகனாயுமிருந்து வேதாகமத்தைச் சேர்த்தெழுதினான்.

தள்ளுபடியாகமத்தில், எஸ்திறாஸ் புத்தகத்தை இவன் அனுமதித்த தாக எண்ணப்படுகிறது.

2. செருபாபேலோடு, பாபிலோனிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போன ஆசாரிய குடும்பத்துத் தலைவன் (நெகே. 12:1,33).

« Prev 153 / 564 Next »