ஏனாக், ஏனாக்கியர் (Anak, Anakim)
(இராட்சதப் பிறவி)
கானானைச் சுற்றிப் பார்க்க போனவர்கள், “அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்" என்றார்கள் (எண். 13:33). ஏனாக்கின் தகப்பன் அர்பா. அவனுடைய மூன்று குமாரர்: சேசாய், ஆகீமான், தல்மாய். அவர்களுடைய பட்டணம் எபிரோன் (யோசுவா. 15:14).
யோசுவா எபிரோனிலும், மற்ற மலைத்தேசங்களிலுமிருந்த ஏனாக்கியரை நிக்கிரகம் பண்ணி, அவர்களுடைய பட்டணங்களை யும் நிர்மூலமாக்கினான். காசாவிலும், காத்திலும், அஸ்தோத்திலும் மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள் (யோசுவா. 15:13).
பின்பு எபிரோன் காலேபுக்கு கொடுக்கப்பட்டபோது, அவன் அங்கிருந்த ஏனாக்கியரைத் துரத்திவிட்டான் (யோசுவா. 15:13).