« Back to word list

ஏனோக்கு (Enoch)

(கற்றுக் கொண்டவன்)

1. காயீனுடைய மூத்த மகன். ஒரு பட்டணத்துக்கும் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது (ஆதி. 4:17,18).

2. யாரேத்தின் மகன். மெத்தூசலாவின் தகப்பன் (ஆதி. 5:21). ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவன் (யூதா. 14). இவன் 365 வருஷம் உயிரோடிருந்து, தேவனோடு சஞ்சரித்துக் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டார் (ஆதி. 5:22-24). விசுவாசத்தினாலே ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான் (எபி. 11:5).

இவன் ஒரு புத்தகம் எழுதினானென்றும், அதில் சொல்லப் பட்டவை புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதென்றும் தெரிய வருகிறது. யூதா. 14:15 வசனம் அவைகளில் ஒன்று.

உபத்திரவ காலத்தின் கடைசி பகுதியில் அதாவது இரண்டாம் 3 வருட காலத்துவக்கத்தில் இரண்டு சாட்சிகள் எருசலேமில் வந்து, பிரசங்கித்து, அற்புதங்களைச் செய்து, அந்திக் கிறிஸ்துவினால் வெட்டப்பட்டு, மரித்து, உயிர்த்தெழும்புவார்கள் என்று எழுதி யிருக்கிறது (வெளி. 11:3-12). சிலர் இவர்கள் எலியாவும், மோசேயும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் எபி. 9:27-ன்படி மனுஷனுக்கு, மரணமும், நியாயத்தீர்ப்பும் நியமிக்கப்பட்டிருக்கிறபடியால், ஒரு தடவை மரணமடைந்த மோசே மறுபடியும் மரணமடைய தேவை யில்லை. ஆதலால் மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்ட ஏனோக்கும் எலியாவும் தான். இந்த இரத்த சாட்சிகள். இந்த ஒழுங்கின்படி ஏனோக்கு மறுபடியும் வந்து, இரத்த சாட்சியாய் மரிப்பான்.

« Prev 160 / 564 Next »