« Back to word list

ஏபோத்து (Ephod)

இது ஆசாரியர் அணிந்துகொள்ள வேண்டிய பரிசுத்த வஸ்திரங்களில் ஒன்று (யாத். 28:4; 39:2). ஏபோத்து, பொன்னினாலும், இளநீல நூலாலும், இன்னும் வேறே நூல்களாலும் விசித்திரமான முறையில் செய்யப்பட்டது (யாத். 28:5). கோமேதகக் கற்களும், இரத்தினங்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தன (யாத். 26:5-7).

பிரதான ஆசாரியரைத் தவிர, வேறே ஆள்களும் ஏபோத்தை அணிந்ததாகத் தெரிகிறது. சாமுவேல் ஏபோத்தை தரித்தவனாய் கர்த்தருக்குப் பணிவிடை செய்தான் (1 சாமு. 2:18).

நோபிலிருந்த ஆசாரியர் சணல் நூல் ஏபோத்தை தரித்திருந்தார்கள் (1 சாமு. 22:18). தேவனுடைய பெட்டியைக் கொண்டுபோகையில் தாவீது சணல் நூல் ஏபோத்தை தரித்துக்கொண்டு நடனம் பண்ணினான் (2 சாமு. 6:14). அபியத்தார் தாவீதிடம் தப்பியோடின போது, ஒரு ஏபோத்தையும் கொண்டு போயிருந்தான் (1 சாமு. 23:6). தாவீது கர்த்தருடைய சித்தத்தை அறிகிறதற்கு அதை உபயோகித் தான் (1 சாமு. 23:9; 30:7).

நியா. 17:5; 18:14; ஓசியா 3:4 இவைகளில் காணப்படுகிற ஏபோத்து, சுரூபங்களோடு சேர்ந்ததாகத் தெரிகிறது. கிதியோன் 1700 பொன் சேக்கலினால் ஒரு ஏபோத்தை செய்வித்தான். அது விக்கிரக ஆராதனைக்கு ஏதுவாயிற்று. (நியா. 8:27). மீகா ஓர் சுரூபத்தையும், விக்கிரகத்தையும் உண்டு பண்ணி, ஒரு ஏபோத்தையும் சேர்த்துக்கொண்டான் (நியா. 17:1-5).

« Prev 163 / 564 Next »