« Back to word list

ஏபால் (Ebal)

(வெறுமை)

1. ஏபால், கெரிசீம் என்னும் இரண்டு மலைகள் சீகேம் பள்ளத்தாக்கின் இரு பக்கத்திலுள்ளவை.

மோசே தனது கடைசி பிரசங்கத்தில் இரண்டு மலைகளில்,கெரிசீம் மலைமேல் ஆசீர்வாதமும், ஏபால் மலைமேல் சாபமும் கூறப்பட வேண்டுமென்றான் (உபா. 11:26-32).

இரண்டாம் முறையும் மோசே, நீங்கள் கானானில் பிரவேசிக்கும் போது, ஏபால் மலையில் கற்களை நாட்டி, சாந்து பூசி, அதிலே நியாயப் பிரமாண வார்த்தைகளை எழுதுங்கள் என்றான் (உபா. 27:1-8).

ஜனங்கள் யோர்தானைக் கடக்கும்போது பாதிக்கோத்திரங்கள் ஆசீர்வாதம் கூறும்படி கெரிசீம் மலையிலும், மற்ற பாதிக் கோத்திரங்கள் சாபம் கூறும்படி ஏபால் மலைமேலும் நிற்கவேண்டும். அப்பொழுது, கற்பனைகளுக்குக் கீழ்படிவோர் ஆசீர்வாதத்துக்கும் கீழ்ப்படியாதோர் சாபத்திற்கும் உட்படுவார்களென்று லேவியர் சொல்லும்போது, ஜனங்கள் ‘ஆமென்' என்று சொல்லுவார்களாக என்றான் (உபா. 27:9-26).

அந்தப்படியே யோசுவா தேசத்தை ஜெயித்தபின் சீகேமிலே ஜனங்களைக் கூடிவரச் செய்து, மோசே கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான் (யோசுவா. 8:30-35).

2. ஓரியனான சேயீரின் சந்ததியான். சேபாவின் குமாரன் (ஆதி. 36:23; 1 நாளா. 1:40).

« Prev 162 / 564 Next »