« Back to word list

ஏலா (Elah)

1. பாஷாவின் மகன். இஸ்ரவேலின் நான்காம் இராஜா. இரண்டு வருடம் அரசாண்டான். இவன் தன் அரண்மனை விசாரணைக் காரன் வீட்டில் குடித்து, வெறித்திருக்கையில் சிம்ரி இவனைக் கொன்றுபோட்டு, தான் இராஜாவாகி, ஒரு வாரம் அரசாண்டான் (1 இரா. 16:8-15).

2. இஸ்ரவேலின் இராஜாவாகிய ஓசியாவின் தகப்பன் (2 இரா. 15:30).

3. ஏசாவின் சந்ததியிலுள்ள ஒரு பிரபு (ஆதி. 36:41; 1 நாளா. 1:52).

4. சவுல் பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணின ஒரு பள்ளத்தாக்கின் பெயர் (1 சாமு. 17:2) தாவீது கோலியாத்தைக் கொன்றதும் இந்தப் பள்ளத்தாக்கில்தான் (1 சாமு.21:9).

5. காலேபின் மகன் (1 நாளா. 4:15).

6. பென்யமீன் கோத்திரத்து ஊசியின் மகன் (1 நாளா. 9:8).

« Prev 167 / 564 Next »