ஏலாம் (Elam)
(வாலிபம்)
1. சேமுடைய குமாரன் (ஆதி. 10:22; 1 நாளா. 1:17). இவனுடைய சந்ததியார் ஏலாமியர் எனப்பட்டார்கள்.
2. தாவீதின் நாள்களில் வாசல் காக்கிறவனாகிய மெஷெலேமி யாவின் ஐந்தாம் மகன் (1 நாளா. 26:3).
3.செருபாபேலோடு பாபிலோனிலிருந்துத் திரும்பி வந்த ஏலாமின் புத்திரர் 1254 பேர் (எஸ்றா. 2:7; நெகே. 7:12).
4. ஆசியாவின் மேற்பக்கத்திலுள்ள ஒரு நாடு. கெதர்லாகோமர் ஒரு காலத்தில் இதன் இராஜாவாயிருந்தான் (ஆதி. 14:1). பாபிலோனிய ஹமுராபி கி.பி. 1760-ல் இவர்களைத் துரத்திவிட்டிருந்தும், திரும்ப இவர்கள் பாபிலோனியரைத் தோற்கடித்து, பல வருடங்களாக அவர்களை ஆண்டார்கள்.
அநேக வருடங்களின் பின் சனகெரிப் இவர்களைத் தோற்கடித்து, ஏலாமியரைச் சமாரியாவில் குடியேற்றி இஸ்ரவேலரை ஏலாமில் வைத்தான் (எஸ்றா. 4:9).
பிற்காலங்களில் ஏலாம், மேதிய-பெர்சிய இராஜ்யத்துக்குட் பட்டிருந்தது. சூசா ஒரு விசேஷ பட்டணமாயிருந்தது.
பாபிலோனைக் கீழ்ப்படுத்த, “ஏலாமே எழும்பு" என்று ஏசாயா சொல்லுகிறான் (ஏசாயா 21:2). இது நிறைவேறிற்று. ஏலாமும் பின்பு அழிக்கப்பட்டது (எரே. 25:25; எசே. 32:24). பெந்தெகொஸ்தே நாளில் ஏலாமியரும், எருசலேமில் இருந்தார்கள் (அப். 2:9).