« Back to word list

ஒப்பீர் (Ophir)

(செழுமை)

1. இவன் சேமின் சந்ததியானாகிய யொக்கானின் குமாரன் (ஆதி. 10:29; 1 நாளா. 1:23).

2. ஒரு துறையின் பெயர். இது தென் அரேபியாவிலுள்ளதென்று எண்ணுகிறார்கள். யொக்தானின் சந்ததியார் அங்கே குடியேறி இருந்திருக்கலாம். இது தங்கத்திற்குப் பெயர் பெற்ற இடம் (யோபு. 22:24; 28:16; சங். 45:9; ஏசாயா. 13:12). சாலொமோன், ஈராம் எனபவர்களின் கப்பல்கள் ஓப்பீருக்குப்போய் பொன் கொண்டு வந்தன (1. இரா. 9:28; 10:11;). (2 நாளா. 8:18; 9:10). யோசபாத் பொன்னுக்காக ஓப்பீருக்கு அனுப்பின கப்பல்கள் எசியோன் கேபேரில் உடைந்து போயின (1 இரா. 22:48). தேவாலயத்தின் வேலைக்காகத் தாவீது ஓப்பீரின் தங்கத்தைச் சேர்த்து வைத்தான் (1 நாளா. 29:4).

« Prev 181 / 564 Next »