« Back to word list

ஓசன்னா (Hosanna)

(கர்த்தரே இரட்சியும்)

இயேசு எருசலேம் தேவாலயத்துக்குப் பவனி போகையில், ஜனங்கள் "உன்னதத்தில் ஓசன்னா" என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் (மத். 21:9; மாற்கு 11:9; யோவான் 12:13).

கூடாரப் பண்டிகை நாள்களில் யூதர் இந்த வார்த்தையை சங். 118:25, 26-லிருந்து எடுத்துச் சொல்வது வழக்கம். "கர்த்தரே இரட்சியும்" என்பது இதன் அர்த்தம். தொடக்கத்தில் இது ஒரு விண்ணப்பம் போல் சொல்லப்பட்டது. சுவிசேஷங்களில் மகிழ்ச்சியான வாழ்த்துதலைக் கருதுகிறது.

« Prev 187 / 564 Next »