ஓசெயா (Hoshea)
(கர்த்தர் உதவி செய்கிறார்)
இவன் இஸ்ரவேல் இராஜ்யத்தின் பத்தொன்பதாவது கடைசி இராஜா (கி.மு. 721). இவனுக்கு முன்னிருந்த பெக்கா அரசாண்ட நாள்களில் அசீரியர் இஸ்ரவேல் இராஜ்யத்தின் அநேகப் பகுதிகளைக் கைப்பற்றி இராஜாவையும் திறை கொடுக்கப் பண்ணினார்கள். பின்பு ஓசெயா, பெக்கா இராஜாவைக் கொன்று போட்டு, தான் இராஜாவானான் (2 இரா. 15:26-30).
இவனும் சில காலம் கப்பங் கட்டிக்கொண்டிருந்தபின், எகிப்தின் உதவியை நம்பி, கப்பம் கொடாமல் விட்டபோது, அசீரிய இராஜாவாகிய சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்துச் சிறையில் போட்டான். பின்பு சமாரியாவை முற்றுகை போட்டு, மூன்று வருடங்களில் பிடித்து, இஸ்ரவேலரை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டு போனான். (கி.மு. 722-2 இரா. 17:3-5).
ஏசாயாவும் 10ஆம், 11ஆம் அதிகாரங்களில் இந்தச் சம்பவங்களைப் பற்றிப் பேசுகிறான்.
2. யோசுவாவுக்கும் இப்பெயர் இருந்தது (எண். 13:8; உபா, 32:44).
3.உடன்படிக்கைக்கு முத்திரை போட்டவர்களில் ஒருவன் (நெகே. 10:23).
4. தாவீதின் நாள்களில் இருந்த எப்பிராயீமின் தலைவன் (1 நாளா. 27:20).