« Back to word list

கபாலஸ்தலம் (Place of skull)

இது ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்ட இடம். கபால ஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் கொல்கொதா (மத். 27:33; மாற்கு. 15:22; லூக்கா. 23:33; யோவான். 19:17). எபிரெய பாஷையிலே "கொல் கொதா" எனப்பட்டது. கல்வாரி என்ற பெயர் லூக்கா 23:33இல் ஆங்கிலத்தில் காணப்படுகிறது.

கபாலஸ்தலம் என்பது காரணப் பெயர் :

(1) கபாலங்கள் (தலையோடுகள்)-அவ்விடத்தில் காணப்பட்டன என்று சொல்லுகிறார்கள்.

(2) இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் முற்காலங்களில் ஒரு தலையோட்டு உருவமான மலையென்பதும் இணங்கக்கூடியது.

(3) ஆதாமுடைய தலையோடும் அங்கே காணப்பட்டது என ஒரு பாரம்பரியமுண்டு.

ஆனாலும் அந்த இடம் இப்போது இருக்கிற “பரிசுத்த கல்லறை” தேவாலயத்தின் சுற்றெல்லைக்குட்பட்டிருக்கிறதாக நிச்சயித்திருக்கி றார்கள். இன்னும் சிலர் எரேமியாவின் குகை என்ற இடத்துக் குட்பட்டிருக்கிறதென்கிறார்கள்.

« Prev 192 / 564 Next »