கானானியர் (Cananites)
இவர்கள் கானான் என்பவனின் சந்ததியார். கானான் தேசத்தின் குடிகள் அராபிய வனாந்தரத்திலிருந்து கி.மு. 3000க்கு முன், பலஸ்தீனாவுக்கு வந்து, தேசத்தைச் சீர்ப்படுத்தினார்கள்.
இவர்கள் மூன்று அட்சர வரியை நினைத்து உண்டு பண்ணினார்கள். இவைகளில் ஒன்றாகிய பெனிக்கேயருடைய அட்சர வரி, மேல் தேசங்களின் எழுத்துகளுக்கு மூலப் பிரதியாயிற்று. இந்த ஜனங்கள் கடலருகேயும், யோர்தான் அண்டையிலும் குடியிருந்தனர் (எண். 13:29). இஸ்ரவேலர் அங்கே போனபின், அத் தேசத்தில் குடியிருந்த அமலேக்கியர், ஏத்தியர், எபூசியர், எமோரியர் முதலியவர்களுடைய தேவர்களைப் பினபற்றாதிருக்கும்படி, அவர்களைத் தேசத்திலிருந்து சங்காரம் பண்ண வேண்டுமென்று மோசே கட்டளை கொடுத்தான் (உபா. 20:17). ஆகிலும் அவர்கள் முற்றாய் துரத்தப்படவில்லை (நியா. 1:27-36). சில கானானியர் தேசத்தில் இருந்து கொண்டு, இவர்களை நெருக்கினார்கள். அவர்களுடைய தேவர்கள் இவர்களுக்குக் கண்ணியானார்கள் (நியா. 2:3).
மீந்திருந்த புறஜாதி ஜனங்களைச் சாலொமோன் அமஞ்சி வேலை செய்ய அடிமைப்படுத்தினான் (1 இரா. 9:20,21).
கானான் தேசத்து வட பக்கத்தில் இருந்த பெனிக்கேயர் பலத்த ஜாதியானார்கள். அவர்கள் சூரிய தேவனையும், பாகாலையும், சந்திரதேவியாகிய அஸ்ரோத்தையும் சேவித்தார்கள். நரபலியும் செலுத்தப்பட்டது. மேலும் அவலட்சணமான கிரியைகளும் நடந்தன. பாகால் வணக்கம் அத்தாலியாளால் இஸ்ரவேலில் ஏற்பட்டது (2 நாளா. 24:7).