கானான் (Canaan)
(தாழ்மையான)
1. காமின் மகன். நோவாவின் பேரன் (ஆதி. 10:6; 1 நாளா. 1:8). தான் வெறித்திருந்த காரியத்தில் காம் செய்ததை நோவா அறிந்து காமின் குமாரனாகிய கானானைச் சபித்தான் (ஆதி. 9:20-25).
இவன் கானானிய கோத்திரங்களின் முற்பிதா. இவனுடைய மூத்தமகன் சீதோன், பெனிக்கே பட்டணத்தைக் கட்டி, தன் பெயரை அதற்கு இட்டான் (ஆதி. 10:15-19).
2. ஆபிரகாம் கானான் தேசத்தில் சேர்ந்தபோது, தேவன் அதை அவன் சந்ததிக்கு வாக்குப் பண்ணினார் (ஆதி. 12:7). பலஸ்தீனா முழுவதும் இந்த ஜனத்தின் பேரால் அழைக்கப்பட்டது.
கானான் தேசம் (Land of Canaan)
ஆபிராம் ஆரானிலிருந்துப் புறப்பட்டு, கானான் தேசத்தில் சேர்ந்தபோது, கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, "உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்றார் (ஆதி. 12:5-17). பலஸ்தீனா தேசம் முழுவதற்கும் இப்பெயர் வழங்குகிறது.
பாகால் கானான்
ஓர் ஏதோமிய இராஜா (ஆதி. 36:38; 1 நாளா. 1:49),