காயீன் (Cain)
(சுதந்தரம்)
1. இவன் ஆதாம், ஏவாள் என்பவர்களின் மூத்த மகன். ஆபேல் இவனுடைய சகோதரன் (ஆதி. 4:1,2). காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான். இருவரும் பலி செலுத்தினபோது, ஆபேலின் பலி அங்கீகரிக்கப் பட்டது (ஆதி. 4:4). அவனுடைய பலி மேன்மையானதென்று தேவன் அதைப் பற்றிச் சாட்சி கொடுத்தார் (எபி. 11:4). காயீனுடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருந்தன (1 யோவான். 3:12). “காயீனுடைய வழியில் நடந்து" (யூதா, II) என்பது பகை, கொலை பாதகத்துக்குக் காரணமாகும் என்பதைக் குறிக்கிறது. காயீனுக்கு ஆபேலின் மேல் இருந்த பகை வர வர அதிகரித்ததினால் கடைசியில் அவனைக் கொன்றான்.
அதைப்பற்றி கர்த்தர் காயீனிடம் கேட்டபோது, பொய் கலந்த மறுமொழி கொடுத்தான். “பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்'' என்று கர்த்தர் சொல்லி அவனைத் துரத்திவிட்டார். அவன் புறப்பட்டுப் போய், நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான் (ஆதி. 4:8-16).
காயீன் விவாகம் செய்து, ஏனோக் என்ற ஒரு குமாரனைப் பெற்ற பின்பு, ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு ஏனோக் என்று பேரிட்டான் (ஆதி. 4:17).
2. எபிரோனுக்கு அருகில் இருந்த யூதாவின் பட்டண மொன்றுக்கு இப்பெயர் இருந்தது (யோசுவா. 15:17).